திடீர் அறிவிப்பு காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார் மிட்செல் ஸ்டார்க்

சமீபத்தில் ஆஸ்ரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து ஆஸ்ரேலிய அணி இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் பிப்., 24-ந்தேதி முதல் தொடங்க உள்ளன.

தற்போது ஆஸ்ரேலிய அணி இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் கடைசி நாளில் ஆஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு இடது மார்பகத்தில் கெட்டியான தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் அவர் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிட்செல் ஸ்டார்க்கிற்கு மாற்றாக கேன் ரிச்சர்ட்சன் மீண்டும் ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதே போல் ஆஸ்ரேலிய பிக் பாஸ் லீக்சில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் டர்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்திய ஆஸ்ரேலியா- இந்தியா ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட நாதன் கொல்டர் நைல் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஹசல்வுட் அணியில் இல்லாததால் பேட் கம்மின்ஸ் துணை கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

ஆஸ்ரேலிய அணி :
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் / 2வது துணை கேப்டன்), நாதன் லயன், ஆடம் ஜாம்பா, ஜேசன் பெகரன்டாஃப், பீட்டர் கேன்ட்ஸ்காம்ப், நாதன் கொல்டர் நைல், ஆஸ்டன் டர்னர், உஷ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஜித் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டானிஸ், டி-ஆர்ச்சி ஷார்ட்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.