திடீரென்று ஓய்வு பற்றி அறிவித்த கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இன்டீஸ் அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இன்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வலை பயிற்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கெய்ல் கூறியதாவது, மே-30ந் தேதி நடக்க போகும் 12வது உலக கோப்பையுடன் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன். இனி இளைஞர்களுக்கு வழிவிட்டு நிற்க போகிறேன். இளைஞர்கள் விளையாடுவதை பார்த்து ரசிக்க போகிறேன்.

ஒருவேளை வெஸ்ட் இன்டீஸ் அணி உலக கோப்பையை வென்றால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒய்வு பெறுவேன் அதே சமயம் உலக முழுக்க நடக்கும் டி20 லீக் தொடரில் பங்கேற்க உள்ளேன். 2020ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் (ECB) நடத்த இருக்கும் 100 பந்துகள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார்.

இவர் சமீப காலமாக அவ்வப்போது மட்டுமே வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்று வருகிறார். ஆனால் முழு நேரமாக உலக முழுக்க நடக்கும் ஐ.பி.எல் போன்ற டி20 லீக் தொடரில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.