கோலி ரெய்னாவுக்கு இடையே மறைமுக போர் இது ஒன்று தான் காரணம்

ஐ.பி.எல் 12வது சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், கோலி மற்றும் ரெய்னாவுக்கு இடையே மறைமுக ரன் போர் தொடங்க உள்ளது.

தற்போது ஐ.பி.எல்லில் அதிக ரன்கள் விளாசியவர் பட்டியலில் ரெய்னா(4985 ரன்கள்) முதல் இடத்திலும், விராட் கோலி(4948 ரன்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இருவருக்கும் இடையே இருக்கும் வெறும் 37 ரன்கள் மட்டுமே.

விராட் கோலி தற்போது உள்ள ஃபார்மில் மிக எளிதாக முதலிடத்தை அடைந்து லிடுவார் என நீங்கள் நினைத்தால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் ஐ.பி.எல் போட்டிகளை தொடர்ந்து உலக கோப்பை தொடர் வருவதால் இந்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி அதிகபட்சம் 10 லீக் போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தொடர் முழுவதும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் சுரேஷ் ரெய்னா.

ரெய்னா ஒரு ஐ.பி.எல் தொடரில் சராசரியாக 500 ரன்களை குவிக்கும் வல்லமை படைத்தவர். எனவே விராட் கோலி முதலிடம் பிடிக்க 10 போட்டிகளில் குறைந்தபட்சம் 550 ரன்களாவது எடுக்க வேண்டும். இது விராட் கோலிக்கு சற்று கடினமான விஷயமே.

முதலிடத்தை தக்க வைத்து கொள்வது சுரேஷ் ரெய்னாவுக்கு எளிது என்பது எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் கரேஷ் ரெய்னா இம்முறை ஐ.பி.எல்லின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற கடும் முயற்சி செய்வார். இந்த தொடரின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினால் மட்டுமே உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நேரடியாகவோ அல்லது காயம் காரணமாக எந்த வீரராவது உலக கோப்பை தொடரில் இருந்து விலக நேரிட்டால் அவருக்கு மாற்று வீரராக களம் இறங்க ரெய்னாவுக்கு வாய்ப்பை பெற்று தரும்.

இந்த ஐ.பி.எல் தொடர் முதல் போட்டியான் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் போட்டி தொடங்கி கடைசி போட்டி வரை விராட் கோலி மற்றும் ரெய்னா இடையே ரன் போர் தொடரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.