டி20 போட்டியில் அசுர சதம் அடித்த புஜாரா வெறும் இத்தனை பந்துதானா

டி20 போட்டியில் முதன்முதலாக சதம் விளாசியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சதீஸ்வர் புஜாரா.


இந்திய டெஸ்ட் அணியின் தாங்கு சுவரும், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தரமான டெஸ்ட் வீரர் சதீஸ்வர் புஜாரா. இவர் டெஸ்ட் போட்டிகளில் என்னதான் சிறப்பாக. விளையாடினாலும் அவரை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் கனவிலும் நினைத்து கூட பார்த்தது இல்லை.


இதற்கு காரணம் புஜாராவின் பேட்டிங் ஸ்டைல் மிக நிதானமான ஆட்டம் மற்றும் ஸ்டிரைக் ரேட் தான். அதிலும் டி20 போட்டி என்றாலே சொதப்பி விடுவார். இதன் காரணமாக இவரை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வருவது இல்லை.


ஆனால் இன்று ரெயில்வேஸ் அணிக்கு எதிராக நடந்த சையது முஷ்டாக் அலி ட்ரோபி உள்ளுர் டி20 போட்டியில் 61 பந்துகளில் சதம் அடித்து விளாசியுள்ளார். இதன் மூலம் தன் மீது இருந்த டெஸ்ட் வீரர் என்ற முத்திரையை உடைத்துள்ளார்.


இந்த போட்டியில் அரைசதம் கடக்க 29 பந்துகள் மட்டுமே எடுத்து கொண்டார் புஜாரா, அடுத்த 50 ரன்களை கடக்க மேலும் 31 பந்துகளை எடுத்து கொண்டார். இச்சதத்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரும் அடங்கும்.


இது சதீஸ்வர் புஜாராவின் முதல் டி20 சதமாகும். மேலும் செளராஷ்ட்ரா அணிக்காக டி20 சதம் அடித்த முதல் வீரரும் ஆவார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.