இந்த பையன் தான் முதல் போட்டியில் கலக்க போறான்-ஹெய்டன்

இந்தியா ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் 1:30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்தியா ஆஸ்ரேலியா இடையேயான டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைவரின் கவனமும் ஒருநாள் போட்டிகள் மீது திரும்பி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் உலக கோப்பை தொடருக்கு முன் இரு அணிகளும் ஏறக்குறைய தங்களது உலக கோப்பைக்கான மிகச் சிறந்த அணியுடன் களம் இறங்குவதே காரணம்.

இத்தொடரில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உலக கோப்பை போட்டியை மையப்படுத்தியே இருக்கும். இந்நிலையில் இந்த முக்கியமான ஒருநாள் தொடரில் எந்த அணி வீரர் அதிக ரன்களை குவிப்பார் மற்றும் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த தொடரில் விராட் கோலியை விட அம்பத்தி ராயுடு தான் அதிக ரன்களை குவிப்பார் என்றும். ராயுடு உலக கோப்பைக்காக இந்திய அணியில் இடம் பெற்றால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் தான் அதிக விக்கெட்டுகளை சாய்ப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.