திகில் சம்பவம்! துப்பாக்கி முனையில் நின்ற சவுரல் கங்குலி

ஒருமுறை தான் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து கற்றுப்பயணம் சென்ற போது, சிறு பையன் ஒருவனால் துப்பாக்கி முனையில் நான் நிறுத்தப்பட்டேன் என தனது திகில் அனுபவம் பற்றி சவுரவ் கங்குலி மனம் திறந்துள்ளார்.

“இந்த சம்பவம் நடந்தது 1996 என நினைக்கிறேன். அந்த ஆண்டு தான் எனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சுற்றுபயணம் சென்றிருந்தேன். டெஸ்ட் போட்டி முடிந்த பின் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நானும் சித்துவும் வெளியே செல்வது வழக்கம். அப்படி தான் ஒரு நாள் நானும் சித்துவும் பின்னர்(Pinner) நகரில் உள்ள சில இந்திய குடும்பங்களை சந்திக்க ரயிலில் சென்றோம்.

அப்போது நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிராக ஐந்து பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருந்தது. அந்த கும்பலில் இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் இருந்தனர். இவர்களுக்கு வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது இருக்கும். பியர் குடிச்சிட்டு இருந்தாங்க.

அந்த கும்பல்ல இருந்த ஒரு பையன் மட்டும் பியர் குடுச்சுகிட்டே எங்களை ஒரு மாதிரியா பார்த்தான். நான் உடனே இதை சித்துவிடம் சொன்னேன். சித்து பிரச்சனை எதுவும் வேணாம் போயிடலாம்னு நான் சொன்னேன். நாங்கள் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரமித்தோம்.

அதே நேரம் அந்த பையன் எங்களை நோக்கி வந்தான். என்னை பத்தி என்னடா அவங்கிட்ட சொன்ன என என்னிடம் கேட்டான். நான் ஒன்னும் சொல்லலைன்னு சொன்னேன். உடனே சித்து அவங்கிட்ட வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். இங்க ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோனுச்சு. என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு நான் என் கண்ணாடியை கீழே தூக்கி எறிஞ்சுட்டு சண்டைக்கு தயாரானேன். மூன்று பேரும் சண்டை போட்டோம்.

அப்போது நாங்க இறங்க வேண்டிய ஸ்டேசன் லந்தது. உடனே நான் அந்த பையனை கீழே தள்ளி விட்டேன். கிழே விழுந்த அந்த பையன் உடனே எழுந்து ஒரு துப்பாக்கியை எடுத்து என் நெத்தியில் வைத்தான்.

அவ்வளவு தான் அந்த நிமிடம் என் வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன். அப்போது அந்த கும்பலில் குண்டாக இருந்த ஒரு பெண் அந்த பையனை பிடிச்சு வெளியே இழுத்திட்டு போய்டா. நல்ல வேளை கடவுள் அருளால் நான் பிழைத்தேன். இந்த சம்பவத்திற்கு பின் நான் எப்போதும் காரில் தான் வெளியே செல்வேன்”.

அந்த டெஸ்ட் தொடரில் அறிமுக போட்டியிலே சதம் விளாசினேன். அந்த தொடரில் மொத்தம் 2 சதம் விளாசினேன்.

தெரியாத கிரிக்கெட் கதை தொடர்: 1

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.