முதல் ஒருநாள் போட்டியில் தெறிக்கவிடப் போகும் இந்திய அணி இதுதான்

ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 2 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்ரேலிய அணியிடம் பறிகொடுத்தது இந்திய அணி.

இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மதியம் ஹைதராபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது.

முதல் முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியை வென்று ஆஸ்ரேலிய அணிக்கு தக்க பதிலடி தரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் நாளை விளையாடும் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

டி20 போட்டியில் ஒன்றாக களம் இறங்காத ரோகித் ஷிகர் தவான் ஜோடி நாளைய ஒருநாள் போட்டியில் வழக்கம் போல் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் இதில் எந்த மாற்றமும் இருக்காது.

நியூஸ்லாந்து அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட லிராட் கோலி மீண்டும் கேப்டனாக ஒரு நாள் அணிக்கு திரும்புகிறார்.

கடந்த ஒரு வருடமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்து வரும் அம்பத்தி ராயுடு நான்காவது இடத்திலும், தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீரராக களம் இறங்குவார்கள்.

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஹந்திக் பாண்டியாவின் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை விட விஜய் ஷங்கரை களம் இறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பந்து வீச்சை பொதுத்த வரை முதல் இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு ஒய்வு அளிக்கபட்டுள்ளதால் அவர் இடத்தில் முகமது ஷமி களம் இறங்குவார். அதே சமயம் டி20 போட்டியில் இடம் பெறாத குல்தீப் யாதவ் இப்போட்டியில் நிச்சயம் இடம் பெறுவார். மேலும் வழக்கம் போல் பும்ரா, சஹால் ஆசியோர் வழக்கம் போல் அணியில் இருப்பார்கள்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி:
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுகேந்திர சஹால், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.