மெகா செய்தி முதல் ஒருநாள் போட்டியில் இவர்கள் இல்லையாம்

இந்தியா ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் 1:30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது.

நாளை நடைபெற உள்ள இப்போட்டியில் இரண்டு முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் முதல் ஒருநாள் போட்டியில் பாண்டியா இடத்தில் ஜடேஜா இடம் பெறுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்ரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முழுமையாக விலகினார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இதனால் பாண்டியாவுக்கு மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா இந்திய ஒரு நாள் அணியில இடம் பெற்றார்.

ஆனால் தற்போது தமிழக வீரர் விஜய் சங்கர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார். அதே சமயம் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிஞ்ச் மற்றும் மார்கஸ் ஸ்டோனில் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது பந்து வீச்சு திறமையை நிரூபித்துள்ளார்.

இதனால் கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கரை வைத்து ஹர்திக் பாண்டியாவின் 10 ஓவர்கள் வீச முடியும். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மிக பலமானதாக மாற்ற முடியும்.

எனவே நாளைய போட்டியில் ஜடேஜாவை விட விஜய் சங்கர் இடம்பெறவே அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தினேஷ் கார்த்திக் இடத்தில் ஒரு நாள் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்டுக்கும் நாளைய போட்டியில் வாய்ப்பில்லை என கிரிக்கெட் ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.