ரசிகர்கள் அதிர்ச்சி தோனிக்கு ஏற்பட்ட பலத்த காயம் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவு

இந்தியா ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் 1:30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் முதல் ஒரு நாள் போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். மற்ற இந்திய வீரர்கள் வழக்கம் போல் வலை பயிற்சியை முடித்து கொண்ட போதும், தோனி நீண்ட நேரம் வலைபயிற்சியில் ஈடுபட்டடார்.

வலைபயிற்சியின் போது இந்திய அணியின் சப்போர்டிங் ஸ்டாஃப் ராகவேந்திரா வீசிய பந்து தோனியின் வலது முழங்கையை பலமாக தாக்கியது.

இதனை தொடர்ந்து தோனியின் காயத்திற்கு முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கையாக காயத்தின் தன்மை குறித்து அளவீடு செய்யப்பட்டுள்ளது.

முதலுதவிக்கு பின் தோனியால் பேட்டிங் செய்ய இயலவில்லை. தோனியின் காயம் குறித்து இன்று மாலை பி.சி.சி.ஐ அறிவிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை காயம் பலமானதாக இருந்து நாளைய போட்டியில் தோனி விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் பண்ட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.