ரெய்னாவை தேடி வந்த அரசின் உயரிய பதவி உற்சாகத்தில் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர். இவர் சமீப காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.

ரெய்சாவுக்கு உத்திர பிரதேசத்தின் தேர்தல் ஆணைய தூதராக பணியாற்றுமாறு காஸியாபாத் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரெய்னாவுக்கு அழைப்பு லிடுக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச தேர்தல் குழுவுடன் இணைந்து பணியாற்ற ரெய்னாவிடம் ஒப்புதல் வாங்குமாறு காஸியாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜித்தேந்திர குமார் ஷர்மா உத்திர பிரதேச தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து காஸியாபாத் மாவட்ட நிர்வாகம் ரெய்னாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் “சுரேஷ் ரெய்னா உத்திர பிரதேச தேர்தல் ஆணையத்துக்கு தூதராக செயல்பட நாங்கள் விரும்புகிறோம். உங்கள் பதிலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.