முதல் ஒருநாள் போட்டி வெற்றிக்கு இவர் மட்டும் தான் காரணம்

இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆஸ்ரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை தொடர்ந்து 237 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் தவான், கோலி, ரோகித் ஷ்ரமா, அம்பத்தி ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானதால் இந்திய அணி 24 ஓவரில் 99 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தோனியுடன் ஜோடி சேர்ந்தார் கேதர் ஜாதவ். இலக்கு சிறியது என்பதால் தோனி சிங்கிள், டாட் பால் என நிதானமாக ஆடினார். மறு முனையில் ஆஸ்ரேலிய அணியின் பந்து விச்சை லாவகமாக எதிர் கொண்ட கேதர் ஜாதவ் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி கடைசி ஓவரில் எந்தவித ரன்ரேட் ஃபிரசர் இல்லாமல் வெற்றி பெற்றது.

ஜாதவ் பேட்டிங்கில் மட்டுமில்லை பந்து வீச்சிலும் முக்கியமான கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிஸின்(37) விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் ஸ்டோனிஸ் மற்றும் கவாஜாவின் 80 ரன் பார்ட்னர்ஷிப் முறிந்தது. இந்த விக்கெட்டை ஜாதவ் எடுத்திருக்கவில்லை என்றால் இந்திய அணி 270 என்ற கடின இலக்கை நோக்கி ஆட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இதனால் இந்திய அணியின் இன்றைய வெற்றிக்கு ஜாதவ் முதன்மை காரணமாகிறார்.

சிறப்பாக விளையாடிய ஜாதவ் 87 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். அதே போல் தோனி 72 பந்துகளில் 59 ரன்களை விளாசினார்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.