இவரையும் விட்டு வைக்காத விராட் கோலி உடைத்து ஏறியப்பட்ட விவ் ரிச்சர்ட்ஸின் சாதனை

தற்போதைய கிரிக்கெட் தலைமுறையில் மூன்று வகை கிரிக்கட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டு வருபவர் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்பன் விராட் கோலி.

இவர் பேட்டிங் செய்யும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைப்பது இவரது வழக்கம். அதே போல் ஒவ்வொரு கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாகவும் சில சாதனை செய்து வருகிறார்.

நேற்று ஆஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 லிக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 64 போட்டிகளில் விராட் கோலி பெற்ற 48வது வெற்றியாகும்.

இதன் மூலம் 64 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையில் இதுவரை 47 வெற்றிகளுடன் 3வது இடத்தில் இருந்த விவ் ரிச்சர்ட்ஸை பின்னுக்கு தள்ளி 3வது இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் வெஸ்ட் இன்டீஸ் லெஜன்ட் கிளைவ் லாய்டு 50 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், முதல் இடத்தில் கேப்டன்களின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 51 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.