என்ன ஆனாலும் சரி இவரை மட்டும் நீக்க மாட்டேன் ரவி சாஸ்த்திரி திட்டவட்டம்

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் ஷிகர் தவானை தவிர மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தங்களது சிறப்பான பங்களிப்பை தந்தனர். ஆனால் சமீப காலமாக சீரற்ற ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவான் முதல் பந்திலே அரைகுறை ஷாட் ஆடி டக் அவுட் ஆனார்.

ஷிகர் தவான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி 14 போட்டிகளில் 355 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். சராசரி 25 மட்டுமே.

சமீப காலமாக இவரது ஆட்டத்தை பார்த்து வரும் கிரிக்கெட் ஆர்வளர்கள் மற்றும் ரசிகர்கள் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளித்துவிட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கும் படி தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதே கேள்வியை நேற்று முதல் போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி சாஸ்த்திரியிடம் கேட்கபட்டது. இதற்கு பதிலளித்த ரவி சாஸ்த்திரி.

முதலில் தவான் ஃபார்மில் இல்லை என்று கூறுவதே தவறு. கடந்த ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பது உண்மை தான். அதற்காக அவரை நீக்கிவிட்டு வேறொரு வீரரை தொடக்க வீரராக களம் இறக்குவது முட்டாள் தனமானது.

தவான் இங்கிலாந்து பருவ நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடுபவர். அந்த வகையில் வருகிற 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர் தவான் என்றார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.