உலக கோப்பை அணியில் கே.எல் ராகுல் இடம்பெற இந்த மூன்று மட்டுமே காரணமாக இருக்கும்

வருகிற மே 30-ந் தேதி முதல் 50 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இதுவரை பி.சி.சி.ஐ அறிவிக்கவில்லை என்றாலும், இத்தொடர்கான இந்திய அணியின் முதல் 12 வீரர்கள் தேர்வாகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

தற்போது மீதமுள்ள மூன்று இடங்களுக்கே இந்திய அணி வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ஒரே இடத்திற்காகவே போட்டி போடுகின்றனர்.

இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை கதவு பி.சி.சி.ஐ.,யால் ஏற்கெவைே மூடப்பட்டுவிட்டது. தற்போது பண்ட் மற்றும் ராகுல் மட்டுமே ரேஸில் உள்ளனர். இந்நிலையில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்டை விட கே.எல் ராகுல் தேர்வாகுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்திலும் பேட்டிங்:
கார்த்திக், பண்ட் . ராகுல் என மூவரும் இந்திய அணியில் பேக் அப் வீரராகவே இடம் பெறுவார்கள். என்றாலும் கார்த்திக், பண்ட் இருவரில் ஒருவரை தேர்வு செய்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனுக்கு காயம் ஏற்படும் போது மட்டுமே களம் இறக்க முடியும். ஆனால் கே.எல் ராகுலை தேர்வு செய்தால் தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனாகவும் பயன்படுத்தலாம்.

தேவையில்லை விக்கெட் கீப்பர்:
இதுவரை தோனி பங்கேற்ற எந்த ஒரு சர்வதேச தொடரில் இருந்தும் காயம் காரணம் காரணமாக பாதியில் விலகியது இல்லை. மேலும் தோனி 37 வயதிலும் செம ஃபிட்டாக உள்ளார். இதனால் இந்திய அணிக்கு மாற்று விக்கெட் கீப்பர் தேவை இல்லை. ஒரு வேளை தேவைப்பட்டால் கே.எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம். கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

சமீப கால ஃபார்ம்..
சமீப காலமாக கே.எல் ராகுல் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 2 டி20 போட்டியில் 51 மற்றும் 47 ரன்களையும், இங்கிலாந்து மண்ணில் இங்லாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து 81 மற்றும் 88 ரன்களை குவித்துள்ளார். இதனால் இந்திய அணியில் கே.எல் ராகுல் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.