எனது ஓய்வுக்கு இது மட்டுமே காரணம் – இம்ரான் தாஹிர்

39 வயதான தென் ஆப்ரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் வருகிற 50 ஓவர் உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது. ” என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ அவ்வளவு காலம் நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் என்றாவது ஒரு நாள் ஓய்வு என்ற பெரிய முடிவை நான் எடுத்துதான் ஆக வேண்டும். நான் இப்பொழுது எடுத்து இருக்கும் முடிவு என் வாழ்வில் மிக முக்கியமானது.

எனக்கு வயதும் 39 ஆகிவிட்டது. எனது ஓய்வுக்கு இதுவும் ஒரு காரணம். மேலும் நான் ஓய்வு பெறுவதால் தென் ஆப்ரிக்கா அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வருகிற 50 உலக கோப்பை தொடரே எனது கடைசி தொடர். அதன் பின் ஒருநாள் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அதே சமயம் 2020 டி20 உலக கோப்பை போட்டி வரை டி20 போட்டிகளில் விளையாட உள்ளேன்.

இம்ரான் தாஹிர் இதுவரை தென் ஆப்ரிக்கா அணிக்காக 20 டெஸ்ட், 85 ஒருநாள், 37 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 57, 139, 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018 வரை டெல்லி டேர்டெவில்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று அணிக்காக விளையாடி உள்ளார். இது ஐ.பி.எல்லில் 38 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.