இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

இந்தியா ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  1. இப்போட்டியின் வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் 558 வெற்றிகளுடன் ஆஸ்ரேலியா உள்ளது.
  2. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது 40 சதத்தை பூர்த்தி செய்தார். முதலிடத்தில் சச்சின் 49 சதங்களுடன் உள்ளார்.
  3. கோலி சதமடித்து இந்தியா வெற்றி பெறும் 33வது போட்டியாகும். சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  4. இந்திய மண்ணில் ரோகித் சர்மாவின் முதல் டக் அவுட் இது தான். இதற்கு முன் 12 முறை டக் அவுட்டாகியுள்ள ரோகித் சர்மா ஒரு முறை கூட இந்திய மண்ணில் டக் அவுட் ஆனதில்லை.
  5. 1995க்கு பிறகு சேஸிங்கில் ஆஸ்ரேலிய அணியை 250 என்ற எளிய இலக்கை எட்ட விடாமல் இந்திய தடுத்தது இதுவே முதல் முறை. முன்னதாக 1994ம் ஆண்டு 246/8 என ஆஸ்ரேலிய அணியை கட்டுபடுத்தியது இந்திய அணி.
  6. ஒருநாள் போட்டிகளில் 2000 ரன் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 3 வது இந்திய வீரர் ஆனார். ரவீந்தர ஜடேஜா. இதற்கு முன் கபில் தேங் சச்சின் இதை செய்துள்ளனர். உலகளவில் 26வது வீரர் ஜடேஜா.
  7. கோலியின் தலைமையில் எதிரணியை 250 ரன்களை எட்டவிடாமல் இந்திய அணி தடுத்து நிறுத்தியது முதல் முறை.
  8. கோலி தனது நேற்றைய போட்டியின் போது ஒரு நாள் போட்டிகளில் தனது 1000மாவது பவுண்டரியை லிளாசினார். இதனை 216 இன்னிங்ஸில் செய்துள்ளார்.
  9. விராட் கோலி நேற்றைய போட்டியில் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து கேப்டனாக 9000 ரன்களை கடந்தார். இதனை வெறும் 159 இன்னிங்சில் செய்துள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 204 இன்னிங்ஸில் 9000 ரன்களை கடந்தார்.
  10. ஒரு நாள் போட்டிகளில் தோனி – ஜடேஜா இணைந்து இதுவரை 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.