கடைசி பந்தில் 28 சிக்சர் அடித்த ஒரே வீரர் இவர் தான்

கிரிக்கெட் விளையாட்டில் சிக்ஸ் அடிப்பது என்பது ஒரு சவாலான ஒன்று. அதிலும் போட்டியின் கடைசி ஓவர் கடைசி பந்தில் சிக்ஸ் அடிப்பது என்பது மிக மிக கடினம். இதனை ஒரு சிலரால் மட்டுமே சரியாக செய்ய முடியும். அதுவும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சில முறை மட்டுமே செய்ய முடியும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியை வழிநடத்துவதில் மட்டுமல்ல சிக்ஸர் அடிப்பதிலும் வல்லவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவர்தான் தனது கிரிக்கெட் கேரியரில் ஒரு நாள், டி20, ஐ.பி.எல் போட்டிகள் என இதுவரை 28 முறை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார். கடைசி பந்தில் அதிக சிக்சர் அடித்த ஒரே வீரர் இவர்தான். இதில் 4 முறை ஐ.பி.எல்லிலும், 11 முறை முதல் இன்னிங்ஸிலும், 13 முறை ரன் சேஸின் போது அடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸ் தோனி ரசிகர்களால் மட்டுமல்ல இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

அதே போல் ஐ.பி.எல்லில் பஞ்சாப் அணியின் அக்சர் பட்டேலின் கடைசி ஓவர் கடைசி 3 பந்துகள் தொடர்ச்சியாக தோனி அடித்த 3 சிக்ஸர்களை ஐ.பி.எல் ரசிகர்களால் மறக்க முடியாது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.