தனது கடைசி ஓவர் பற்றி விஜய் சங்கர் சொன்னது இதுதான்

கடைசி ஒலருக்காக மனதளவில் தயாரானேன், முடியும் என நம்பினேன், செய்து முடித்தேன் என விஜய் சங்கர் தனது திரில்லான கடைசி ஓவர் பற்றி கூறியுள்ளார்.

இந்தியா ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி (116 ரன்)மற்றும் விஜய் சங்கரை (46 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானதால், 48.2 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்ரேலியா அணிக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் 10 ஓவர்கள் 49 ஓவரிலே முடிந்திருந்ததால், கடைசி ஓவரை வீச விஜய் சங்கர் அழைக்கப்பட்டார். பேட்டிங் முனையில் வெல் ஷெட்டில் பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டோனிஸ் இருந்ததால் இந்திய அணியின் வெற்றி பெறாது என்றே அனைவரும் நினைத்தனர்.எனென்றால் இந்த போட்டியின் சங்கர் வீசிய தனது முதல் ஓவரிலே 13 ரன்களை விட்டு கொடுத்தார்.

அனைவரது கருத்தையும் பொய்யாக்கி இந்திய அணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனது திறமையை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது சங்கரின் கடைசி ஓவர். கடைசி ஒவரின் முதல் பந்தில் ஸ்டோனிஸ் மற்றும் மூன்றாவது பந்தில் ஜாம்பாவின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.

இப்போட்டி முடிந்த பின்னர் தனது கடைசி ஓவரை பற்றி நிரூபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., போட்டியில் 43 மற்றும் 44வது ஓவரிலே எனக்கு தெரியும். நான் எப்போது வேண்டுமானாலும் ஒரு ஓவர் பந்து வீச அழைக்கபடலாம் என எண்ணினேன். ஒரு வேளை அது கடைசி ஓவராக கூட இருக்கலாம் அதில் 10 முதல் 15 ரன்களுக்குள் கட்டுபடுத்த வேண்டியதிருக்கும் என நினைத்தேன். கடைசி ஒலருக்காக முதலில் நான் மனதளவில் தயாரானேன், பின் யோசித்தேன், என்னால் முடித்து காட்ட முடியும் என நம்பினேன். முடித்து காட்டினேன். இந்த கடைசி ஓவரின் மூலம் அணி நிர்வாகத்திற்கு என் மீது அதிக நம்பிக்கை வந்திருக்கும் என்றார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.