மூன்றாவது ஒருநாள் போட்டி மூன்று அதிரடி மாற்றத்துடன் தெறிக்கவிடும் இந்திய அணி

இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலியா அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக இழந்தது இந்திய அணி. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியை 6 விக்கெட் வித்யாசத்திலும், 2வது போட்டியை 8 ரன்கள் வித்யாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இத்தொடரின் மூன்றாவது போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலும் தனது சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தவான் நீக்கப்பட்டு கே.எல் ராகுலுக்கு தொடக்க ஆட்டக்காராக வாய்ப்பு அளிக்கப்படும்.

அதே சமயம் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவிற்கு ஓய்வு தரப்பட்டு சஹாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். முதல் இரண்டு டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளின் போது ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் இப்போட்டியில் முகமது ஷமி இடத்தில் களம் இறங்குவார்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி:
ரோகித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், யுகேந்திர சஹர்ல, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.