கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் ருத்ரதாண்டவம் ஆடிய ஷங்கர் வீடியோ உள்ளே

டெல்லி ரெயில்வேஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார் மகாராஷ்ட்ரா அணி வீரர் நிகில் ஷங்கர் நாயக்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான குரூப் ‘ஏ’ சூப்பர் லீக் டி20 போட்டியில் மகராஷ்ட்ரா மற்றும் ரெயில்வேஸ் அணிகள் நேற்று மோதினர். இப்போட்டியில் டாஸ் வென்ற ரெயில்வேஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த மகாராஷ்ட்ரா அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நெளஷாத் ஷேக் 59 ரன்னும், நிகில் ஷங்கர் நாயக் 95 ரன்களும் விளாசினர்.

மகாராஷ்ட்ரா அணியின் பேட்ஸ்மேன் நிகில் ஷங்கர் நாயக் 20வது ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ந்து விளாசினார். இதனால் 19 ஓவரில் 147 ரன்களில் இருந்த மகாராஷ்ட்ரா அணி 20 வது ஓவர் முடிவில் 177 ரன்களை தொட்டது.

இதனை அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மகாராஷ்ட்ரா அணி 21 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி போட்டிக்கு முன்னேறி உளளது மகாராஷ்ட்ரா அணி.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.