சென்னை அணியின் புதிய பாடலை பாடிய சுரேஷ் ரெய்னா வீடியோ உள்ளே

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனியின் சென்னை அணியும் கோலியின் பெங்ளுர் அணியும் மோதுகின்றனர்.

இப்போட்டி தொடங்க வெறும் 10 நாள்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான சென்னை அணியின் புதிய “விசில் போடு” தீம் பாடல் அண்மையில் பதிவு செய்யப்பட்டது.

இப்பாடல் பதிவின் போது சுரேஷ் ரெய்னா பங்கேற்று பாடலை பாடினார். தற்போது சென்னை ரசிகர்களை குஷிபடுத்தும் நோக்கில் ரெய்னா பாடிய 10 நொடி வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டுலிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் ரெய்னா “சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க” என்ற வரிகளை பாடி விசில் அடிக்கிறார். அருகில் உள்ள நபர்கள் சூப்பர் என கூறி ரெய்னாவை உற்சாகபடுத்துகின்றனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.