முக்கிய அறிவிப்பு ஐ.பி.எல் போட்டிக்கு முன் ஆஸி அணியில் இணையும் ஸ்மித் மற்றும் வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தற்போது 1 வருட தடையில் உள்ளனர். இத்தடை வருகிற மார்ச் 29ந் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் இருவரும் வருகிற மார்ச் 23ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும், அதன் பின் உலக கோப்பை போட்டியின் போது ஆஸ்ரேலியா அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னர் துபாயில் நடைபெற உள்ள பாகிஸ்தான் எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்ரேலியா அணியுடன் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Justin langar

இது குறித்து ஆஸ்ரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது. ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் மார்ச் 22ந் தேதிக்கு முன்னர் துபாயில் தொடர்ந்து 3 நாட்கள் ஆஸ்ரேலியா அணியுடன் நேரம் செலவிட உள்ளனர்.

இந்த 3 நாட்களில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்ரேலியா அணியுடன் வலை பயிற்சி மற்றும் ஆலோசனை நடத்த உள்ளனர். உலக கோப்பைக்கு முன் இருவரும் ஆஸ்ரேலியா அணியுடன் இணைவது நல்ல உத்வேகத்தை ஆஸ்ரேலியா அணிக்கு தரும். மேலும் இது ஸ்மித் மற்றும் வார்னரை மீண்டும் அணிக்கு வரவேற்கும் நிகழ்ச்சியாக இருக்கும்.

இந்த 3 நாட்களுக்கு பின் மார்ச் 23ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் இருவரும் பங்கேற்பார்கள் என லாங்கர் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.