ஸ்டம்ப்பை பறக்கவிட்டபடி ஜடேஜா எடுத்த முதல் விக்கட்! துள்ளிக்குதித்த விராட் கோலி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் உஷ்மான் க்வாஜா ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். 14.2 ஓவர்களில் இவர்களுடைய பாட்னர்ஷிப் 76 ரன்களை எட்டியது. இதனால் இந்திய அணி எப்படியாவது அவர்களுடைய பாட்னர்ஷிப்பை கலைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தது.

அப்போது 14-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த ஜடேஜா 14.3 பந்தில் ஆரோன் பிஞ்சின் விக்கட்டை தெறிக்கவிட்டார். அந்த ஓவரில் ஜடேஜா பந்தை நன்றாக சுழற்றினார். இதனை எதிர்கொள்ள திணறிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஸ்டம்ப்பை பறக்கவிட்டபடி போல்டாகி 27(43) என்ற நிலையில் தன்னுடைய விக்கட்டை இழந்தார்.

முதல் விக்கட்டே அபாரமான விக்கட்டாக இருந்ததால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி துள்ளி குதித்து தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.



Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.