தெறிக்கும் அறிவிப்பு கொல்கத்தா அணியில் இன்று புதிதாக ஒப்பந்தமான வாரியர் வீரர்

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டிகள் தொடங்க இன்னும் 10க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் முதல் பெரும் தலை வலியாக இருந்தது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். மிட்செல் ஜான்சன், சிவம் மாவி, வினய் குமார், பாம் கரண் என அனைவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை வாரி வழங்கினர்.

இதனால் இந்த ஆண்டு ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியதுவம் தந்தது கொல்கத்தா அணி. ஏலத்தில் ஹாரி கர்னி, லோக்கி பெர்குசன், பரத்வெய்ட், பிரித்வி ராஜ் யர்ரா என பல வேகப் பந்து விச்சாளர்களை வாங்கியது கொல்கத்தா அணி.

இந்நிலையில் அந்த அணியின் வேகப் பந்து வீச்சு கூட்டணியை மேலும் பலப்படுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா அணி. இதனை அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.