தோனி போல் சிறப்பாக ஹெலிகாப்டர் ஷாட் ஆடிய ஹர்திக் பாண்டியா வீடீயோ

மாதம் தனது முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து முழுமையாக விலகினார் ஹர்திக் பாண்டியா. முதுகு வலி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக முழு ஓய்வில் இருந்து வந்தார்.

இதனால் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் அடுத்தடுத்து நடைபெற உள்ள ஐ.பி.எல் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ஒரு மாத கால நீண்ட ஓய்வுக்கு பின் இன்று மீண்டும் வலை பயிற்சி செய்தார் ஹர்திக் பாண்டியா. தனது உடல் முழுவதும் குணமடைந்து விட்டது என்பதை மும்பை அணி ரசிகர்களுக்கும், பி.சி.சி.ஐ-கும் தெரிவிக்கும் விதமாக வலை பயிற்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வலை பயிற்சி வீடியோவில் ஹர்திக் பாண்டியா தோனியை போல் ஹெலிகாப்டர் ஷாட் ஆடியுள்ளார். மேலும் இந்த ஷாட் யாரை பார்த்து கற்று கொண்டேன் என கூறுங்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.