பொள்ளாச்சி விவகாரம் முக்கிய வீடியோவை வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலமாக மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ரங்கராஜ் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை சீரழித்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 4 பேரிடம் இருந்த கைப்பற்றப்பட்ட ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்கள் தான் இதை செய்துள்ளார்கள் என்றும், இந்த செயலை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வாருகின்றனர் என உறுதிபட தெரிய வருகிறது.

இந்த கும்பலால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப் பட்டிருந்தும், இதுவரை ஒரே ஒரு பெண் மட்டுமே பிப்ரவரி 24ந் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தமிழக காவல் துறை பெண்ணை மானபங்கம் படுத்துதல் இந்தியன் தண்டனை சட்டம் 354 ‘ஏ’, பெண்ணின் துகில் (ஆனட) உறிதல் இந்தியன் தண்டனை சட்டம் 354 ‘பி’, வழிப்பறி இந்தியன் தண்டனை சட்டம் 392, பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தல் தொழில்நுட்ப சட்டம் 66 ‘இ’ ஆகிய 4 பிரிவுகளில் வலுவாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி. இருந்தாலும் இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பெற்றோர் அனுமதியுடன் காவல் நிலைwத்தில் இவர்கள் மீது தனி தனியாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.

இதன் மூலம் இந்த வழக்கில் சம்மந்தபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உச்சபட்ச தண்டனை பெற்று தர முடியும் என கேட்டு கொண்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.