மீண்டும் ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கும் சவுரல் கங்குலி டெல்லி அணியிடம் புதிய ஒப்பந்தம் கையெழுத்து

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளது. இந்நிலையில் டெல்லி அணி அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது.

டெல்லி அணி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது டெல்லி அணி.

இது குறித்து டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இனி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராகவும், முகமது கைஃப் பீல்டிங் பயிற்சியாளராகவும், சவுரல் கங்குலி தலைமை ஆலோசகராக இருப்பார்கள் எனக் கூறியுள்ளது.

மேலும் கங்குலியின் வருகை டெல்லி அணிக்கு பலம் சேர்க்கும் என நம்புகிறோம். அதே சமயம் இம்முறை டெல்லி அணி சிறந்த இளம் வீரர்களை கொண்டுள்ளது. இம்முறை நிச்சயம் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றுவோம்.

கங்குலியை கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ரசிகர்கள் ஐ.பி.எல் டக்அவுட்டில் பார்த்திருப்பார்கள். இனி ஒவ்வொரு போட்டியிலும் டெல்லி அணியின் டக்அவுட்டில் பார்ப்பர்கள் என கூறியுள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.