சற்றுமுன் ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடை நீங்கியது சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கடந்த 2013ம் ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்தாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டு லிசாரணைக்கு உட்படுத்தபட்டனர்.

பின் இவர்கள் மூன்று பேருக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது பி.சி.சி.ஐ. விசாரணையில் ஸ்ரீசாந்த் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் சிறை தண்டனையில் இருந்து தப்பினார். இருந்தாலும் அவர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீடிக்கும் என பி.சி.சி.ஐ அறிவித்தது. மேலும் அவர் மீது உள்ள தடையை நீக்க கோரி பி.சி.சி.ஐ-யிடம் பரிந்துரை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து தன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க கோரி கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை தீடிக்கும் என தீர்ப்பளித்தது. கேரள உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தனது வாழ்நாள் தடையை நீக்குமாறு டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஸ்ரீசாந்த்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்றும், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்கி இன்று தீர்பளித்து உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.