நான்காவது இடம் தினேஷ் கார்த்திக்கு தான் போட்டு உடைத்த முக்கிய பிரபலம்

ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என இந்திய அணி இழக்க மிக முக்கிய காரணம் உலக கோப்பை போட்டியில் 4வது இடத்தில் யார் களம் இறங்குவது, தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் யார் என்ற இந்திய அணியின் தேடலே.

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் மட்டும் கே.எல் ராகுல், அம்பத்தி ராயுடு ரிஷப் பண்ட் என மூன்று வீரர்களை களம் இறக்கி பார்த்தது. இதில் ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராகவும் பயன்படுத்தி பார்த்தது.

ஆனால் மூவரில் ஒருவர் கூட தங்களுக்கு தந்த வாய்ப்பை சிறிது கூட பயன்படுத்தவில்லை. முடிவு உலக கோப்பை போட்டிகள் நெருங்கிய போதும் நான்காவது வீரர் யார் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் யார் என தெரியாமல் முழிக்கிறது இந்திய அணி.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த முன்னாள் ஆஸ்ரேலிய அணி வீரரும், கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் சைமன் கேடிச் கூறியதாவது. கடந்த ஒரு வருடமாகவே இந்திய அணியில் 4வது இடம் யாருக்கு என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்திய அணியில் இந்த இடத்திற்கு மிக பொருத்தமான ஒரு வீரர் தினேஷ் கார்த்திக் தான். கார்த்திக் ஏராளமான திறமை உடையவர். கடைசி நேரத்தில் போட்டிங்கில் இருக்கும் பிரசரை நன்றாத கையாள தெரிந்தவர். அவரை 4 வது இடத்தில் களம் இறக்கலாம், விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம்.

இப்படி எக்கசக்க திறமை இருந்தும் இதுவரை தினேஷ் கார்த்திக்கை அந்த இடத்தில் ஒரு நாள் போட்டிகளில் பரிசீலனை செய்யாதது ஆச்சரியமாக உள்ளது. என்னை பொறுத்த வரை அந்த இடம் தினேஷ் கார்த்திக்கு தான் பொறுத்தமானது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.