புஜாரா மட்டும் தான் அதற்கு சரி கங்குலி திட்டவட்டமாக அறிவிப்பு

ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என இந்திய அணி இழந்தது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் கடைசி மூன்று போட்டிகளில் ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது.

இதற்கு மிக முக்கிய காரணம் கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியில் இருந்த ஏராளமான மாற்றங்களும், உலக கோப்பைக்கான இந்திய அணியின் நான்காவது வீரர் யார் தேடலும் தான். இந்த தேடல் கடந்த ஒரு வருடமாகவே இந்திய அணியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இடத்தில் மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஷ் ஐயர், அமத்தி ராயுடு, கே.எல் ராகுல் மற்றும் பண்ட் என பல வீரர்கள் களம் இறங்கி விட்டார்கள்.

ஆனால் ஒருவரும் வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் உலக கோப்பைக்கான இந்திய அணியின் நான்காவது இடத்துக்கு சதீஷ்வர் புஜாராவை பரிந்துரை செய்துள்ளார் சவுரவ் கங்குலி.

இது குறித்து அவர் கூறியதாவது, சதீஷ்வர் புஜாரா தற்போது இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக உள்ளார். இந்திய அணிக்காக ஒரு சில ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உன்ளார். புஜாராவை உலக கோப்பை போட்டியில் நான்காவது இடத்தில் இறக்கலாம். அவர் நிச்சயமாக மிடில் ஆர்டரில் இந்திய அணியின் தேவையை பூர்த்தி செய்வார்.

எனக்கு தெரியும் எனது இந்த யோசனையை கேட்டு பலரும் என்னை ஏளனம் செய்வார்கள். புஜாரா பீல்டிங்கில் சுமாராக இருந்தாலும், நல்ல பேட்ஸ்மேன். ஒரு நாள் போட்டிகளில் டிராவிட் என்ன செய்தாரோ அதை புஜாராவால் செய்ய முடியும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.