சென்னை அணிக்கு இது தேவையில்லை தோனிக்கும் இதில் விருப்பமில்லை ராம்ஜி ஸ்ரீனிவாசன்

கடந்த 2016ம் ஆண்டு விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டன் Uதவி ஏற்றவுடன் பல மாற்றங்கள் இந்திய அணியில் கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று தான் வீரர்களின் உடல் தகுதியை நிரூபிக்கும் “யோ-யோ” தேர்வு.

இந்த தேர்வில் பாஸ் செய்து உடல் தகுதியை நிரூபித்தால் தான் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்ற எழுதப்படாத விதி விராட் கோலியால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளிலும் வீரர்களின் உடல் தகுதியை நிரூபிக்க யோ-யோ தேர்வை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சி.எஸ்.கே அணியின் யோ-யோ தேர்வு குறித்தும், தோனியின் உடற்பயிற்சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்சியாளரும், சி.எஸ்.கே அணியில் ஒருவருமான ராம்ஜி ஸ்ரீனிவாசன் கூறியதாவது

உடற்பயிற்சி விஷயத்தில் தோனி மற்றவர்களை விட வித்தியாசமானவர். அவருக்கு கிளீன் அன்ட் ஜர்க் மற்றும் பவர் லிஃப்டிங் போன்ற கடினமான உடற்பயிற்சியை விரும்புவது இல்லை. அவர் ஒரு ஸ்மார்ட் உடற்பயிற்சியாளர். அவர் தனது திறனை வலிமையாக்கும் பயிற்சிகளையும் மட்டுமே செய்வார். அதனுடன் பாக்சிங் செய்வார்.

யோ-யோ தேர்வை கொண்டு வீரர்களின் திறமையை எடை போட முடியாது. எனவே தோனிக்கு அதில் ஆர்வமில்லை. எனக்கும் அப்படித்தான். எனவே ஐ.பி.எல் பொறுத்த வரை சென்னை அணிக்கு யோ-யோ கிடையாது என அவர் கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.