சென்னை அணிக்கு புதிய ஓப்பனர்ஸ் இவர்கள் தான் இசைவு தெரிவித்த தோனி

வருகிற மார்ச் 23ந் தேதி முதல் 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற தங்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தது ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடுவின் தொடக்க ஆட்டம். இந்த ஆண்டு ஷேன் வாட்சன் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் செம ஃபார்மில் உள்ளார். ஆனால் அம்பத்தி ராயுடு மோசமான ஃபார்மில் உள்ளார்.

இதனால் ராயுடுவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாமா அல்லது முரளி விஜயை களம் இறக்கலாமா என சென்னை அணி நிர்வாகம் யோசித்து வந்தது.

இந்நிலையில் இன்று நடந்தது சென்னை அணி நிர்வாக கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் முதலில் வாட்சன் மற்றும் ராயுடுவை தொடக்க ஆட்டகாரராக களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு வேளை ராயுடு தொடர்ந்து சொதப்பினால் முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கலாம் என முடிவு எடுக்கபட்டுள்ளது.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற ராயுடுவுக்கு உள்ள கடைசி வாய்ப்பு ஐ.பி.எல் மட்டுமே உள்ளதால், தோனியும் நிர்வாக குழுவின் முடிவுக்கு இசைவு தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.