பொள்ளாச்சி விவகாரம் இந்த இரு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு உச்ச தண்டனை பெற்று தர வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் மக்களும், மாணவர்களும். அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தலர் சரத்குமார். இவரது இரு மகள்களில் ஒருவர் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த இரு பெண்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர நிகழ்வை அறிந்து நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம்.

எனவே தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி தரவேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் எடுத்த இந்த முடிவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.