ஐபில் போட்டிக்கு முன்பே காயம் காரணமாக வெளியேறிய சிவம் மாவி!

2019-ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் வருகிற மார்ச் 23-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. கோப்பையை குறி வைத்து ஒவ்வொரு அணியும் இப்போதே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வருட ஐபில் போட்டிகள் எந்த வருடமும் இல்லாதது போல் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏனென்றால் இந்த ஐபில் போட்டிகள் முடிந்ததை அடுத்து 50 ஓவருக்கான உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனால் உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வீரர்களும் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Third party image reference

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக வழிநடத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் சிவம் மாவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்காலிகமாக சில போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் கே.சி.கரியப்பா விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Third party image reference

ஆல்ரவுண்டராக விளையாடி வந்த சிவம் மாவின் இடத்தை சுழற்பந்து வீச்சாளர் கே.சி.கரியப்பா பூர்த்தி செய்வாரா என்ற கேள்வி கொல்கத்தா அணியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.