தோனியிடமும் கோலியிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் -ரிஷாப் பண்ட்

Third party image reference

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷாப் பண்ட் எப்போதெல்லாம் அணியில் தோனி இல்லையோ அப்போதெல்லாம் அவருடைய இடத்தில் இருந்து விக்கட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிவற்றை கவனித்து வருகிறார். இதனால் வருகிற காலங்களில் ரிஷாப் பண்ட் இந்திய அணியில் தோனி இல்லாத குறையை நிவர்த்தி செய்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணியில், கடைசி இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு வழங்கிய BCCI அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட்டை களமிறக்கியது. ஆனால் ரிஷாப் பண்ட் மிகவும் மோசமான விக்கட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

இதையடுத்து ரிஷாப் பண்ட்டின் இந்த மோசமான பார்ம் குறித்து அவருக்கு எதிராக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி ரிஷாப் பண்ட் தற்போது ஐபில் போட்டிகளில் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்க கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Third party image reference

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிஷாப் பண்ட் “என்னை தோனியுடன் சிலர் ஒப்பிட்டு பேசுவதை நான் எப்போதும் விரும்பியதில்லை. நான் ஒரு சாதாரண கிரிக்கட் வீரர். தோனியோ கிரிக்கட் விளையாட்டின் சாதனையாளர். அவரிடம் பேசி அனைத்தையும் எப்படி கற்றுக்கொள்வது என்று முயற்சிக்கிறேன்.

Third party image reference

நான் அவர்களிடம் (தோனி மற்றும் விராட் கோலி) இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். நேர்மை, அழுத்தத்தை கையாளும் பண்பு, மேலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளை அவர்களைப்போலவே உன்னிப்பாக கவனித்து அவற்றை நான் செய்யாமல் இருக்க கற்றுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.