4-வது இடத்தில் விளையாட என்னால் முடியும்; BCCI-க்கே கோரிக்கை வைத்த ஹனுமா விஹாரி..

Third party image reference

சமீபத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தொடரையும் இழந்தது.

இந்திய அணியின் இந்த தோல்விக்கு காரணம் மிடில் ஆர்டரான 4-வது இடத்தில் விளையாடும் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தான் என்று முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் உலகக்கோப்பை தொடர் வருகிற மே மாதம் நடைபெற இருப்பதால் 4-வது இடத்திற்கு பொறுப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்யும்படி BCCI-க்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தற்போது ஐபில் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ஒரு இந்திய வீரரை உலகக்கோப்பை அணியில் நான்காவது இடத்தில் விளையாட BCCI தேர்வு செய்யவுள்ளது.

இந்நிலையில் ஐபில் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஹனுமா விஹாரி தானாகவே முன்வந்து உலக்கோப்பை அணியில் நான்காவது இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்கும்படி BCCI-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Third party image reference

இதுகுறித்து அவர் கூறுகையில்., “எனக்கு தெரியும் என்னால் எல்லா சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாட முடியும். சொல்லப்போனால் நான் ஒரு பினிஷராக கூட விளையாடுவேன். நான் என்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்துவேன். ஐபில் போட்டிகளில் நான் விளையாடுவதற்கு முன்பு என்னால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாது. ஆனால் இப்போது என்னால் என்னுடைய பலத்தை உணர முடிகிறது. நான் விராட் கோலி மற்றும் கெய்ன் வில்லியம்சன் போல சிறப்பாக பவுண்டரி அடிக்க தெரிந்ததவன். என்னால் மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும். இந்த ஐபில் போட்டியில் நான் என்னுடைய திறமையை நிரூபிப்பேன். எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடிக்க மனதை அதற்கேற்ப மாற்றிக்கொண்டாலே போதும்” என்று அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.