அகர பலம் பெற்ற மும்பை அணி சற்றுமுன் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏதுவாக அமையவில்லை. குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர் டிபார்ட்மென்டில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறது மும்பை அணி .

இத்தொடர் தொடங்கும் முன்பே மும்பை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா மற்றும் ஆஸ்ரேலியா வேகப் பந்து வீச்சாளர் ஜேசன் பெகரன்டாப் ஆகியோர் முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் சிங்கிளை தடுக்க டைவ் அடித்த பும்ராவின் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பயிற்சி ஆட்டத்தின் போது நியூஸ்லாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்கு குதி காலில் வீக்கம் ஏற்பட்டது. வீக்கம் அதிகம் ஆகியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக மும்பை அணி அறிவித்தது.

இதனால் மும்பை அணியின் வேகப் பந்து வீச்சு பகுதி மிகவும் பலவீணமானது. இதனை சரி செய்யவும் விதமாகவும், ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராகவும் வெஸ்ட் இன்டீஸ் வேகப் பந்து வீச்சாளர் அல்ஜார்ரி ஜோசப்பை மும்பை அணிக்கு புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் கரீபியன் டி20 லீக்கில் நல்ல ஃபார்மில் இருந்த அல்ஜார்ரி ஜோசப் பை சேர்த்தன் மூலம் மும்பை அணியின் பந்து வீச்சுக்கு புதிய பலம் சேர்க்கும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.