இதற்கு என்னை நானே நொந்து கொள்ள வேண்டும் – ரவிசந்திரன் அஸ்வின்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 2019 தொடரின் ஆறாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் சொல்கத்தா அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 24 ரன்கள்,, நிதிஷ் ரானா 63 ரன்கள், உத்தப்பா 67 ரன்கள், ஆன்ரே ரஸல் 48 என அனைவரும் அதிரடியாய் ஆட 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெயில் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, அதிரடியாய் ஆடிய மில்லர் 59 ரன்கள், மயங் அகர்வால் 58 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 28 ரன்கள் வித்தியாத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆன்ரே ரஸல் 3 ரன் எடுத்திருந்த போது, 17 ஓவரின் கடைசி பந்தில், முகமது ஷமியின் யாக்கர் பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆனால் 30 யார்ட் வட்டத்தில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்ளே இருந்ததால் அந்த பந்தை நோ பாலாக அறிவித்தார் நடுவர். இதனை தொடர்ந்து ரஸல் சந்தித்த 11 பந்தில் 5 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசினார். அவர் 18 பந்தில் 48 ரன்களை குவித்து அவுட்டானார். இந்த நோ பால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியடைய மிக முக்கிய காரணமாய் அமைந்தது.

போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய அஸ்வின், போட்டியின் போது சிறு சிறு விஷயங்களை ( நோ பால்) நாங்கள் கவனிக்கவில்லை. இந்த சிறு தவறு எங்களை இந்த போட்டியில் தோல்வி அடைய செய்து விட்டது. இதற்கு யாரையும் குறை கூற முடியாது என்னை நானே தான் நொந்து கொள்ள வேண்டும்.

வருண் சக்கரவர்த்தி முதலில் அதிக ரன்கள் தந்தாலும் 15வது ஓவரை அருமையாக வீசினார். இந்த போட்டியில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்று கொண்டுள்ளோம். அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.