இன்றைய போட்டியில் மும்பை அணியில் இடம் பெறும் சுழல் ஜாம்பவான்

ஐ.பி.எல் 12வது சீசனின் இன்று நடக்கும் ஏழாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இன்று மோதும் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். எனவே இன்று நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டும்.

மும்பை அணியை பொறுத்த வரை முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பெளலிங் சுமாராகவே இருந்தது. பேட்டிங்கில் யுவராஜ் சிங் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் பந்துவீச்சில் ஒரு வீரர் கூட எக்கனாமிக்காக பந்து வீசவில்லை.

மேலும் முதல் போட்டியில் முழுநேர சுழற் பந்து வீச்சாளர் மும்பை அணியில் இடம் பெறாதது ஒரு குறையாக கருதப்பட்டது. இதனால் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ராசிக் சலாம் நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு மும்பை அணிக்கு சிறப்பாக பந்து வீசிய மயங் மார்கண்டே இன்றைய போட்டியில் இடம் பெறுகிறார்.

கடந்த ஆண்டு மும்பை அணிக்காக 14 போட்டியில் விளையாடிய மயங் மார்க்கண்டே 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் அணியில் பென் கட்டிங் நீக்கப்பட்டு மும்பை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.