மன்கட் அவுட் எம்.சி.சியின் அதிரடி கருத்தால் அதிர்ந்து போன அஸ்வின்

கடந்த திங்கள் கிழமை நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் அதிரடியாய் ஆடி கொண்டிருந்த ஜாஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறைப்படி அவுட் செய்தார். இதனால் வெற்றி பெறும் நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி அடைத்து .

இதனை தொடர்ந்து அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டை பாதிப்பதாகவும். அவரது செயல் தவறு என்றும் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் டிராவிட், கும்ளே, டீன் ஜோன்ஸ் போன்ற ஒரு சில சிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதே சமயம் விமர்சனத்திற்கு உள்ளான அஸ்வினும் தான் மக்கட் முறையில் அவுட் செய்தது விதிகளுக்கு உட்பட்டது தான் எனவும், பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றது தவறு தான் என வாதிட்டு வருகிறார்.

இந்நிலையில் மண்கட் அவுட் பற்றி கிரிக்கெட் விதிகளை எழுதும் எம்.சி.சி இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில பத்திரிக்கையில் தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

கிரிக்கெட் விதியின் படி, பந்து வீச்சாளர் பந்து வீசும் போது நான் ஸ்டரைக்கர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே சென்றால் பவுலர் ரன் அவுட் தாராளமாக செய்யலாம் . ஆனால் அஸ்வின் பந்து வீசுவது போல் வந்து நின்று விட்டார். பின் பட்லர் கிரீஸை விட்டு வெளியே செல்லும் வரை காத்திருந்து அதன் பின் ரன் அவுட் செய்தார்.

நாங்கள் பார்த்த வரை அஸ்வினின் கையில் பந்து சாதாரணமாக இருப்பதை விட அதிக நேரம் இருந்தது. எனவே அஸ்வின் பட்லரை அவுட் செய்தது கிரிக்கெட் உணர்வுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

விதிகளுக்கு உட்பட்டு பட்லரை அவுட் செய்தாலும் எம்.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ அஸ்வினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதால் அஸ்வின் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.