மீண்டும் சன் ரைசர்ஸ் அணியில் இணையும் ரன் மெஷின்

நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். மேலும் இப்போட்டி நாளை (மார்ச் 29) இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கேன் வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை.

இதனால் முதல் போட்டியில் சன் ரைசர்லர் அணியை அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் சேப்பட னாகவழி நடத்தினார். முதல் போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸலின் கடைசி கட்ட அதிரடியால் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் கேன் வில்லியம்சன்னின் காயம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், தற்போது அவர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வில்லியம்சன் கேப்டனாக நாளைய போட்டியில் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.