அதிர்ச்சி நடுவர் அறைக்கு சென்று தகாத வார்த்தையில் பேசிய விராட் கோலி

போட்டி முடிந்த பின் நடுவர்கள் அறைக்கு சென்று விராட் கோலி நடுவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களுர் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. இப்போட்டியில் பெங்களுர் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய கடைசி பந்தில் சிவம் துபே 1 ரன் மட்டும் எடுக்க மும்பை அணி வெற்றி த்ரில் பெற்றது.

இதனையடுத்து மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பாலாக இருப்பதும், அதை நடுவர் எஸ்.ரவி கவனிக்காததும் மைதானத்தில் இருந்த பெரிய திரை டி.வி ரீப்ளேவில் தெரிய வந்தது. இதனை பார்த்த கோலி கோபத்தின் உச்சத்திற்கு சென்றார்.

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலே நடுவர்கள் அறைக்கு சென்ற கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நடுவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளார். மேலும் அந்த பால் நோ-பாலாக அறிவித்திருந்தால் போட்டி தலைகீழாக மாறியிருக்கும். விதிமுறைகளை மீறி உங்களிடம் வாக்குவாதம் செய்வதற்கு அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என போட்டி நடுவர் மனு நாய்யரிடம் கூறியுள்ளார்.

இதன் பின் அதே கோபத்துடன் பேட்டியளித்த கோலி கூறியதாவது, நாங்கள் கிளப் லெவல் கிரிக்கெட் விளையாடவில்லை. உயர் தர ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறோம். நடுவர்கள் கண்களை திறந்து வைத்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என கோபத்துடன் கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.