அவர் ஒரு லெஜன்ட் புகழ்ந்து தள்ளிய க்ருனால் பாண்டியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெங்களுர் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஏபி -டிவில்லியர்ஸ் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் இருந்ததால் பெங்களுர் அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் 19வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் பெங்களுர் அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இதனையடுத்து மலிங்காவும் கட்டுகோப்பாக கடைசி ஓவரை வீச மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின் க்ருனால் பாண்டியா ஜஸ்பிரித் பும்ராவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

இன்றைய போட்டி மும்பை அணிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. 19வது ஓவரை பும்ரா வீசிய விதம் அருமையாக இருந்தது. உண்மையில் பும்ரா ஒரு லெஜன்ட்.போல் பந்து வீசினார். அவர் ஒரு லெஜன்ட் தான். அவர் இந்தியாவுக்காக விளையாடினாலும் அல்லது மும்பைக்காக விளையாடினாலும் அவரது செயல்திறன் ஒரே மாதிரியாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கிடைத்தது ஒரு வரம். அதே போல் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினார் என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.