சாக்க்ஷி தோனியை கடித்த மோகித் சர்மா விழுந்து லிழுந்து சிரித்த சென்னை அணியினர்

டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இது இந்த வருட ஐ.பி.எல்லில் சென்னை அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

இந்த வெற்றியை் தொடர்ந்து சென்னை அணி டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். இந்த பயணத்தின் போது சென்னை அணி வீரர் மோகித் ஷர்மா தோனியின் மனைவி சாக்க்ஷி தோனியிடம் கடி ஜோக் கூறி சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோவை சென்னை அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் சாக்க்ஷி தோனியின் அருகில் சென்ற மோகித் சர்மா, 100லிருந்து 10ஐ எத்தனை முறை கழிக்க முடியும் என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த சாக்க்ஷி தோனி முதலில் 100 முறை எனவும், அதன் பின் 10 முறை எனவும், 2 முறை எனவும் மாற்றி மாற்றி பதில் தந்தார்.

இதனை கண்டு சிரித்த மோகித் சர்மா, விடை ஒரு முறைதான் எனக் கூறினார். இதற்கு விளக்கமளித்த அவர், 100லிருந்து 10ஐ கழித்தால் 90 ஆகிவிடும். அதன் பின் எப்படி 100லிருந்து கழிக்க முடியும் என கடித்தார். இதனை கேட்ட அனைவரும் உடனே சிரித்து விட்டனர்.

சென்னை அணி வெளியிட்ட ஜாலியான வீடியோ தற்போக் வைரலாகி வருகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.