நேற்றைய போட்டியில் உலகமே கவனிக்க தவறிய 3 மிக முக்கிய நிகழ்வுகள்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெங்களுர் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய கடைசி பந்தில் பெங்களுர் அணி வீரர் சிவம் துபே ஒரு ரன் மட்டும் எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் டி.வி ரீப்ளேவில் மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பால் என தெரிய வந்தது. துர்திருஷ்டம் விதமாக இது நடுவரின் பார்வையில் இருந்து தப்பியது. இது பெங்களுர் அணியின் வெற்றியை பறித்தது. இதனை பார்த்த கோலி கோபம் அடைந்தார்.

தற்போது மலிங்காவின் நோ-பால் தான் ஐ.பி.எல் உலகில் பேச்சு பொருளாக உள்ளது. இந்த நோ – பாலை போல் நாம் கவனிக்காத 3 முக்கிய நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா இரண்டாம் இடம்:

நேற்று நடந்த போட்டியில் ரோகித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்களை குவித்து மும்பை அணிக்கு அபார தொடக்கம் தந்தார். இந்த ரன்கள் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக ரோகித் சர்மா 661 ரன்களை குவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 661 ரன்களுடன் ரோகித் இரண்டாம் இடத்திலும், 710 ரன்களுடன் தோனி முதலிடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல் 2019ன் தொலை தூர சிக்ஸ்:

கடைசி 3 ஓவர்களில் அதிரடியாய் ஆடிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். கடைசி ஓவரில் பாண்டியா அடித்த சிக்ஸ் 104 மீட்டர் தூரம் சென்றது. இது வரை இந்த சிக்ஸ்தான் ஐ.பி.எல் 2019ன் தொலைதூர சிக்ஸ் ஆகும்.

சகாலின் இரண்டாவது பெஸ்ட் பெளலிங்:

நேற்று சிறப்பாக பந்து வீசிய யுகேந்திரச சகால் 4 ஓவரில் 38 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சகாலின் இரண்டாவது பெஸ்ட் பெளலிங் ஆகும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.