மூன்று அதிரடி மாற்றங்களுடன் களம் இறங்கும் சன் ரைசர்ஸ் அணி

இன்று இரவு 8.00 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருந்தது. குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் மற்றும் விஜய் சங்கர் என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்படவில்லை.குறிப்பாக டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் கூட சிறப்பாக பந்து வீசவில்லை. இதனால் இன்றைய போட்டியில் 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் தீபக் ஹூடா நீக்கப்பட்டு, தோள்பட்டை காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் கேப்டனாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டு விருத்திமான் சகா இடம் பெறுவார்.

அதே சமயம் முதல் போட்டியில் மோசமாக பந்து வீசிய சந்திப் சர்மா நீக்கப்பட்டு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அணியில் சேர்க்கப்படுவார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.