சோகக் கடலில் சி.எஸ்.கே அணி தொடரில் இருந்து விலகிய இரண்டாவது முக்கிய வீரர்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் சென்னை அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளையும் வென்று ஐ .பி.எல் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

28 வயதான டேவிட் வில்லிக்கு ஒரு சில நாட்களுக்கு முன் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தன் குழந்தை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், அதனால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

தற்போது சென்னை அணியில் லுங்கி இங்கிடி மற்றும் டேவிட் வில்லி என இரண்டு வேகப் பந்து வீச்சாளர்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். மேலும் அனுபவம் வாய்ந்த ஷேன் வாட்சனும் இனி பந்துவீச போவதில்லை என அறிவித்துள்ளதால் சென்னை அணியின் பந்து வீச்சு பகுதி ஆட்டம் கண்டுள்ளது.

லுங்கி இங்கிடி மற்றும் டேவிட் வில்லி ஆகியோருக்கான மாற்று வீரர்கள் விரைவில் சென்னை அணியால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.