தோல்விக்கு இவர் மட்டும் தான் காரணம் ஓபனாக சொன்ன ரஹானே

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாத் மைதானத்தில் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. மிகவும் எதிர்பார்த்த பட்லர் 4 ரன்னில் அவுட்டாக, ரஹானே மற்றும் சாம்சன் ஜோடி அதிரடியாய் ஆடி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரஹானே 70 ரன்னும், சாம்சன் 102* ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

199 என்ற இமாலய இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தொம்சம் செய்த வார்னர் 37 பந்துகளில் 69 ரன்களை குவித்து அவுட்டானார். இதில் 9 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதனை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 45, விஜய் சங்கர் 35 ரன் எடுக்க சன் ரைசர்ஸ் 19வது ஓவர் முடிவில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே கூறியதாவது, நானும் சஞ்சு சாம்சனும் பேட் செய்த போது, பேட்டிங் விக்கெட் ஸ்லோவாகவும், பந்துகள் நின்று பேட்டிற்கு வந்தது. இதனால் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தோம். சஞ்சு சாம்சன் திறமையாக ஆடி சதம் அடித்தார். அவர் திறமை மீது எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. எப்போதும் அவர் இதே போன்று நிலை தன்மையுடன் ஆட வேண்டும்.

எந்த மைதானத்திலும் 190+ ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் டேவிட் வார்னர் போன்ற வீரர் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிபடுத்தும் போது எங்களால் ஒன்னும் செய்ய இயலவில்லை. அவ்வப்போது விக்கெட்டுகள் விழுந்தாலும் டேவிட் வார்னரின் அதிரடி தொடக்கத்தால் வெற்றி பாதைக்கு போட்டியை திருப்ப எங்களால் முடியவில்லை. எங்கள் தோல்விக்கு வார்னரின் ஆட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.