நிறுத்து.. நிறுத்து.. ஒரு பீட்சாவால் சில நிமிடம் போட்டி தடைபட்ட சுவாரஷ்ய சம்பவம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஐ.பி.எல் லீக் போட்டியில் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது பார்வையாளர் ஒருவருக்கு பீட்சா கொண்டு வந்தவரால் சில நிமிடங்கள் போட்டி தடைபட்ட்து.

நேற்றைய போட்டியில் அதிரடியாய் ஆடிய சஞ்சு சாம்சன் சதம் அடித்தார் என்பது நாம் அறிந்ததே. இப்போட்டியில் சாம்சன் 44 ரன்னில் இருக்கும் போது, 12வது ஓவரின் 5வது பந்தை வீச ஓடி வருவார். விஜய்சங்கர். அப்போது திடீரென்று விஜய் சங்கரை ஓடி வருவதை நிறுத்த சொல்வார் சாம்சன்.

தனக்கு நேர் எதிராக இருந்த பார்வையாளர் பகுதியில் யாரோ ஒருவர் அங்கும் இங்குமாக அழைந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் கவனம் சிதறிய சாம்சன் விஜய் சங்கரை நிறுத்தியுள்ளார்.

அவர் வேறயாருமில்லை பீட்சா பாய் தான். பார்வையாளர்களில் ஒருவர் போட்டியின் நடுவே பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதனால் பீட்சாவை கொண்டு வந்த பையன் நிறுத்தி நிதானமாய் தேடி பீட்சாவை தந்துள்ளார். இவர் செல்லும் வரை போட்டி சில நிமிடம் தடைபட்டது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.