போட்டி தொடங்கியதும் சர்ச்சை ஒரே ஒவரில் ஏழு பந்து வீசிய அஸ்வின்

ஐ.பி.எல் 12வது சீசனின் ஓன்பதாவது லீக் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் காயம் காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு, தமிழக வீரர் முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம் மும்பை அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடுகிறது.

இப்போட்டியின் முதல் ஓவரை பஞ்சாப் அணி கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் வீசினார். முதல் ஓவரை சிறப்பாக வீசிய அஸ்வின் அந்த ஓவரின் 6 பந்தில் 3 ரன் மட்டுமே கொடுத்தார்.

ஆனால் அஸ்வின் 6 பந்துகள் வீசியதை சரியாக கணக்கெடுக்காத நடுவர், அஸ்வினை வற்புறுத்தி ஏழாவது பந்தை வீச வைத்தார். இந்த ஏழாவது Vந்தில் குவின்டன் -டி-காக் பவுண்டரி அடித்தார். இதனால் இப்போட்டியின் முதல் ஓவரில் அஸ்வின் ஏழு பந்து வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.